11291 நேர்கொண்ட பாவை.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (இணுவில்: அம்மா அச்சகம்).

xiv, 236 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-51147-7-9.

ஒரு பெண்குழந்தை முதன்முதலாகத் தாயின் கருவறையில் உதிப்பது முதல் அவளது மரணம் வரையிலான படிமுறைகளை 42 படிநிலைகளாக வகுத்து ஒவ்வொரு படிநிலையையும் கருத்தாழத்துடன் விரிவாக விபரித்து பெண்ணின் வாழ்க்கை முறையையும், அவள் எவ்வாறு நம்பிக்கை கொண்டவளாகவும் தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு ஏற்றுக்கொண்டு வாழ்ந்து மறைகிறாள் என்பதையும் விளக்கியுள்ளார். ஒவ்வொரு தலைப்பின்கீழும் பொருத்தமான பாடல்வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இடையிடையே புராணக் கதைகள், பாடல் வரிகள் என்பவற்றைச் செருகி நூலை ஆர்வத்துடன் வாசிக்கவைத்திருக்கிறார். எந்தெந்த வயதில் பெண் குழந்தைகளை எவ்வாறு அணுகவேண்டும், எந்தெந்த வயதில் பெண்களின் மனோநிலை எவ்வாறு இருக்கும், சிறுவயதில் தாய் கூறும் அறிவுரைகள் பெண்பிள்ளைகளிடம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, பெண்ணின் பார்வையில் சமூகத்தின் நோக்கு தான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும் தருணத்தில் தாயின் ஆலோசனகள் ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பு என்பன பற்றியெல்லாம் சமூக உளவியல்நோக்கில் இந்நூல் 42 இயல்களில் ஆராய்ந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

12416 – சிந்தனை (தொகுதி XV, இதழ் 3).

செல்லையா கிருஷ்ணராசா (இதழாசிரியர்), எஸ்.சந்திரசேகரம் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). v, 117

9102 சைவ சித்தாந்தமும் கலையும்.

தயாளினி நவநீதகிருஷ்ணன். யாழ்ப்பாணம்: நவநீதகிருஷ்ணன் பதிப்பகம், 5ஆம் வட்டாரம், நயினாதீவு, 1வது பதிப்பு, தை 2008. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், காங்கேசன்துறை வீதி). x, 74 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×13

Virtual Data Rooms Costs

Virtual data rooms allow companies to share confidential documents with a variety of parties in complex business transactions. They are an excellent solution for M&A