ந.இரவீந்திரன். கல்கிசை: புதிய பண்பாட்டுத் தளம், 13, மவுண்ட் அவென்யூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (வவுனியா: அகரம் பிரின்டர்ஸ், இல. 54, கந்தசாமி கோவில் வீதி).
xi, 175 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-41109-3-9.
இரட்டைத் தேசியம் சார்ந்த விவாதத்தை முன்வைக்கும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப்போராட்டம், வரலாறும் வர்க்கப் போராட்டமும், தேசியம் இனத்தேசியம், சோவியத் தகர்வும் தலித்தியவாதம் முனைப்படைதலும், ஒக்டோபர் 21 எழுச்சி, சாதி: ஒடுக்கப்படும் திணைகளும் திணை மேலாதிக்கமும், சாதிகளிடையே அதிகார மாற்றம், பண்பாட்டுப் புரட்சியில் சாதிய வர்க்கம், சமூக மாற்றக் கட்டத்தில் சாதி வர்க்கப் பிரிவினரிடையே சமநிலைக் குலைவு, முடிவுரைக்குப் பதிலாக ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘ஒக்டோபர் 21’ எழுச்சியின் 50ஆவது ஆண்டு நிறைவினையொட்டி இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61338).