சிவலிங்கம் புஷ்பராஜ். தெகிவளை: காயத்திரி வெளியீட்டகம், த.பெ.எண். 64, டீ சில்வா வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை).
162 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-8741-57-3.
அரசியல் விஞ்ஞானத்தை உயர்தரத்திற் கற்கின்ற மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு ஒரு வழிகாட்டிப் பயிற்சியை இந்நூல் வழங்குகின்றது. அரசியலும் அரசியல் விஞ்ஞானத்தை இனம்காணலும், அரசு பற்றிய கற்கை, அரசாங்கம் பற்றிய கற்கை, அரசியல் அமைப்பு மாதிரிகள், அரசாங்க செயன்முறை: அரசாங்கமும் மக்களும், பொதுத்துறை நிர்வாகம்- பொதுக்கொள்கை- முகாமைத்துவம், மோதலும் மோதல் தீர்வும், சர்வதேச அரசியல், தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் அரசியல் அமைப்பு முறை, விடைகள் ஆகிய பத்து அத்தியாயங்களில் இந்நூல் விரிகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்துறையில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் அரசியல் விஞ்ஞானப் பிரிவில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்ற நூலாசிரியர் கினிகத்தேனை, அம்பகமுவ பிரதேச செயலகத்தில் முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தராகப் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 12749).