தேவநேசன் நேசையா. கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 24/2, 28ஆவது ஒழுங்கை, ப்ஃளவர் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (கொழும்பு: க்ளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).
76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-1655-85-3.
நான்கு பாகங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதற்பாகம் அறிமுகமாகவும், இரண்டாம் பாகம் பரிந்துரைகள், குறுகிய கால நடவடிக்கைகள் (1999ஆம் ஆண்டின்போது எடுக்கப்படவேண்டும்), நீண்டகால நடவடிக்கைகள், அமுலாக்கமும் கண்காணித்தலும் ஆகிய விடயங்களையும் பேசுகின்றன. மூன்றாம் பாகம் மொழிக்கொள்கை, கல்வி -சம வாய்ப்புக்கள், சமாதானக் கல்வி, LLRC அறிக்கையின் மேற்கோள் பற்றிய குறிப்புரைகள் ஆகிய அம்சங்களையும், இறுதிப்பாகம் இலங்கையின் மொழி:தேசிய ஐக்கியத்துக்கான ஓர் அரசியலமைப்பு ஆகிய விடயங்களையும்; பற்றிப் பேசுவதாகவும் அமைந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61634).