11306 பொருளாதார அபிவிருத்திச் செல்வழி: இலங்கையின் அனுபவத்தை ஆதாரமாகக்கொண்ட ஓர் உசாவல்.

ந.ரவீந்திரகுமாரன், மு.கணேஷமூர்த்தி (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 6: பேராசிரியர் நாகலிங்கம் பாலகிருஷ்ணன் சேவைநலன் பாராட்டுக் குழு, 611, ஹவ்லொக் வீதி, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxii, 603 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ., ISBN: 978-955-51372-0-1.

பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் அவர்கள் நான்கு தசாப்த காலத்திற்கு மேலாக கல்வித்துறைக்கு ஆற்றிய சேவையினைக் கௌரவிக்கும் முகமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலானது பொருளாதார அபிவிருத்தியின் பரிமாணங்கள், பேரினப் பொருளாதாரக் கொள்நெறிகளின் அணுகுமுறைகள், சர்வதேசப் பொருளாதாரத்தின் செல்வாக்குகள், மோதலும் பொருளாதார அழுத்தங்களும், வறுமையின் பரிமாணங்கள், அரசியலும் பொருளாதாரமும், ஆகிய சமகால முக்கியத்துவம் கொண்ட ஆறு பிரதான தலைப்புகளின் கீழ் மொத்தம் இருபத்தி மூன்று கட்டுரைகளைத் தாங்கி வருகின்றது. கட்டுரைகள் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி என்ற குறிக்கோளின் வெவ்வேறு பக்கங்களைப் பிரதிபலிப்பதுடன் கோட்பாட்டுரீதியானதும் அனுபவரீதியானதுமான ஆய்வுகளின் பெறுபேறுகளை ஒரே நூலில் வாசகருக்குப் பயன்படும் விதத்தில் ஒழுங்குபடுத்தித் தந்துள்ளது. கார்த்திகேசு சிவத்தம்பி, வேலுப்பிள்ளை பசுபதி சிவநாதன், நல்லதம்பி பேரின்பநாதன், கணபதிப்பிள்ளை ஞானேஸ்வரன், செல்வநாயகி ஸ்ரீகணநாதன், பாலசுந்தரம் சிவாஜி, இராஜகோபால் நந்தகுமாரன், கனகசபை அருளம்பலம் விமலேந்திரராஜா, தங்கதுரை இராஜேஸ்வரன், முஸ்தபா முகம்மது தெசீம், கோபாலபிள்ளை அமிர்தலிங்கம், முத்துவடிவு சின்னத்தம்பி, அப்துல் அஸீஸ் முகம்மது நுபைல், கலைச்செல்வி ரவீந்திரகுமாரன், ஆறுப்பிள்ளை தயாபரன், முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தன், நவரட்ணம் இரவீந்திரகுமாரன், செல்வரத்தினம் சந்திரசேகரம், இரத்தினம் ஸ்ரீகாந்தன், சரவணமுத்து ஜெயராஜா, சின்னத்துரை விஜயகுமார், சிதம்பரப்பிள்ளை அமலநாதன், விசாகலிங்கம் நித்தியானந்தம், முருகேசு கணேசமூர்த்தி, கனகையா இரகுநாதன், தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன் ஆகியோர் இந்நூலிலுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

wow vegasi online kasiino

Online casino bonus Mgm casino online Wow vegasi online kasiino You won’t notice a dramatic difference in the short run when playing online slots with

Furious Upset Monkey Mini Slot

Content Best Gambling enterprises That offer Nextgen Playing Game: Last Review of The brand new Furious Angry Monkey Gambling establishment Slot Finest six Novomatic Slots