க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 52 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 25.5×18 சமீ. “ஜீவநதி” யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் ஆகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இச்சஞ்சிகையின் 39ஆவது இதழில், தலைமுறை கடந்த எழுச்சி (க.பரணீதரன்), தமிழில் நவீன இலக்கியம் இன்றைய பார்வையில் மேற்கிளம்பும் சில புரிந்துணர்வு அனுபவங்கள் (பெரிய ஐங்கரன்), ஒரு இனத்தின் துடிப்பு (எஸ்.மதி), மயில்வாகனத்தின் மனசாட்சி (சுதர்மமகாராஜன்), தமிழ்த் திரைப்படத் தலைப்புகள் ஒரு குறும்பார்வை (இ.சு.முரளிதரன்), இறந்தகாலத்தின் இழப்புக்களா அன்றேல் எதிர்காலத்தின் எழுச்சியா? இளங்கவிஞர்களின் பாடுபொருளாக வேண்டியது எது? (மன்னரான் ஷிஹார்), புதுப்புனல்: எங்கே போகிறது எம் சமூகம், அவளுக்கென்றொரு பாதை (ச.நிரஞ்சனி), நேர்காணல்: நாச்சியாதீவு பர்வீன் சந்திப்பு க. பரணீதரன், இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் (மா.செல்வதாஸ்), மறப்பேனோடி? (அ.விஷ்ணுவர்த்தினி), பட்டும் படாத பனைகள், அச்சங்களால் அதிரும் எனது “படுக்கையறை” (வெற்றி துஷ்யந்தன்), நீங்கள் நல்லாயிருக்கோணும் (இ.தனஞ்சயன்), மணியக்கா (மன்னார் அமுதன்), சொர்க்கம் வேறெங்குமில்லை (க.பரணீதரன்), தோல்வியின் வடிவம் (வை.சாரங்கன்), எழுத வந்தவர்களும் எழும்பி ஓடியவர்களும் (பி.அமல்ராஜ்), குயில்கள் இப்போது குரைக்கின்றன (பொத்துவில் அஸ்மின்), அண்மைக்கால நவீன ஈழத்து தமிழ்க் கவிதைச் செல்நெறி “முதற்கட்ட குறிப்புகள்” (எல்.வஸீம் அக்ரம்), என் செய்வேன் நான்?-கவிதை (தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா), குழந்தாய்-கவிதை- (வெலிகம ரிம்ஸா முஹம்மத்), அழிக்கப்பட முடியாத அடையாளங்கள் சிவரமணி கவிதைகள் ஒரு நோக்கு (கு.றஜீபன்), கவிதை – இடாஹோ மார்ச்சிப்பானி (ஆரையூர்த் தாமரை), புலம் பெயர் உறவுகளுக்கு (புலோலியூர் வேல் நந்தன்), பத்து நிமிடப் பௌர்ணமி (பேருவளை றபீக் மொஹிடீன்), கனவுச்சாலையில் நிஜத் தடங்களின் பதிவுகள் 7ஆம் அறிவை நோக்கிய பயணம் (எஸ். நிமலன்), த. அஜந்தகுமாரின் 2 கவிதைகள், மிருகம் அல்ல (வீரகுமார்), எனது இலக்கியத் தடம் 22: யாத்திரையும் சுற்றுலாவையும் இணைக்கும் ஒரு பயண இலக்கியப் புது முயற்சி வட இந்தியப் பயண அனுபவங்கள் (தி.ஞானசேகரன்), கலை இலக்கிய நிகழ்வுகள் ஆகிய படைப்பாக்கங்கள் இவ்விதழை அலங்கரித்துள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொதுசன நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 529).
The incredible Hulk Free Slots Gamble On line Slot machine games
Articles Best online casino slots games: The incredible Hulk Slot Games Info & Have Happy Gambling enterprise Small Links Thegraphics from the online game are