மகேஷா டீ சில்வா. கொழும்பு 12: இலங்கைச் சட்ட உதவி ஆணைக்குழு, இல. 129, மேல் நீதிமன்றக் கட்டடத் தொகுதி, 1வது பதிப்பு, 2010. (ராஜகிரிய: பிரின்டெக் எஸ்டபிளிஷ்மென்ட் தனியார் நிறுவனம், இல. 41/1 A, பெரேரா மாவத்தை).
166 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
இலங்கையின் பிரபல சிறுவர் பாதுகாப்புச் சட்டத்தரணியான மகேஷா டீ சில்வா அவர்களினால் எழுதப்பட்டுள்ள இந்நூல் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடைமுறையிலுள்ள சட்டமூலங்கள் பற்றியும் அதனால் சிறுவர்களுக்குக் கிடைக்கும் சட்டபூர்வமான பாதுகாப்புக் குறித்தும் விரிவாக விளக்குகின்றது. இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வினை பொது மக்களிடையே ஏற்படுத்தவதுடன் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் துர்நடத்தை போன்றவற்றில் ஈடுபடுவோருக்கும் ஒரு எச்சரிக்கையாக இந்நூல் அமைகின்றது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14362).