சிவகுருநாதன் இரங்கராஜா. கொழும்பு: ச.செந்துராசா, தலைவர், SOND, SWOAD அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).
104 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.
உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் இலங்கையில் வட-கிழக்கில் நீண்டகாலத்தின் பின் நடந்து முடிந்து தமிழ்பேசும் மக்கள் தமது பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்வுசெய்தும் பல்வேறு அரசியல் காரணங்களால் இம்மன்றங்களின் சேவைகளைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இம்மன்றங்களின் அதிகாரங்கள் எவை என்பதை இம்மன்ற ஆளுநர்களும் தெரிந்திருக்கவில்லை. இந்நிலையில் எமது கீழ்மட்ட உள்ளுர் நிர்வாகத்தை நாமே சிறப்பாகச் செயற்படுத்தும் வகையில் ஒரு தகவல் வழங்கும் நூலாக இது எழுதப்பட்டுள்ளது. உள்ளுராட்சி முறையின் புதிய பரிமாணம், 21ஆம் நூற்றாண்டின் உள்ளுராட்சி பற்றிய முக்கியமான புதிய கருத்துக்கள், புதிய உள்ளுர் ஆளுகைக் கருத்துக்கள் தோன்றுவதற்கான பின்னணிக் காரணங்கள், ஆளுகை நியமங்கள் பூகோளமயமாதல், இலங்கையில் உள்ளுராட்சி முறைமையும் அதிகாரப் பரவலாக்கலின் கீழ் அதன் நிலையும், இலங்கையின் தற்போதைய உள்ளுராட்சி முறைமைக்கான சட்டப்புறவுரு, வடகிழக்கு பிரதேச சமூக பொருளாதாரச் சூழல், புதிய வாய்ப்புகளைக் கைப்பற்றுவதில் உள்ள பொதுவான உத்தி முறைகள், யார் இந்த உள்ளுர் ஆளுகையாளர்கள், இணைப்புகள், நிறைவு ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் இ. 12854).