11332 மதுவும் அடிமை நிலையும்.

ஆ.பேரின்பநாதன். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி ஆ.பேரின்பநாதன், இல. 767, மானிப்பாய் வீதி, ஆறுகால் மடம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி).

xviii, 106 பக்கம், விளக்கப்படம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 11624-6-7.

டாக்டர் ஆ.பேரின்பநாதனின் 12ஆவது நூலாக இது வெளிவந்துள்ளது. முதலாம் இயல் மதுப்பாவனையின் ஆரம்பநிலை பற்றிக் கூறுகின்றது. இரண்டாம் இயல் மதுவின் வகைகள், மதுசாரம் தயாரிப்பு முறைகள், கசிப்பு போன்ற நச்சுச் சாராய உற்பத்தி போன்ற விபரங்களைத் தருகின்றது. இயல் மூன்றில், உடலில் மதுவின் தாக்கம், அல்க்ககோலால் பாதிக்கப்படும் உறுப்புகள் பற்றிக் கூறப்படுகின்றது. இயல் நான்கு குடிகாரரின் மனப்பாங்கு, மதுவும் இதயமும், மதுபோதைக்கான பரிசோதனைகள், மதுவும் மாரடைப்பும் ஆகிய விடயங்களை உள்ளடக்குகின்றது. இயல் ஐந்தில் மதுபானத்திலிருந்து பெறப்படும் மருந்துப்பொருட்கள் மற்றும் பதநீர், பனங்கட்டி, கல்லாக்காரம் போன்றவை பற்றிய விளக்கம் தரப்படுகின்றது. ஆறாவது இயலில் மதுவை மறக்க என்ன வழி என்று ஆலோசனை தரப்படுகின்றது. ஏழாவது இயலில் மதுபானத்தால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகள், குடும்பச் சீரழிவுகள், பொருளாதாரப் பிரச்சினைகள், குடிகாரர்களின் பிள்ளைகளின் எதிர்காலம், மாணவர்களும் மதுபாவனையும் என்பனபோன்ற சமூகவியல் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இயல் எட்டு, மதுவும் அடிமைநிலையும், மதுபோதையில் ஏற்படும் நடத்தைப் பிறழ்வு  மதுப்பழக்கம் ஏற்படக் காரணம் என்பனபோன்ற விடயங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஒன்பதாவது இயலில் மதுவால் நேரும் உளப்பாதிப்புகள், மது அடிமை நிலைக்கான  சிகிச்சை முறைகள், மருந்துவகைகள், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு உளவள சிகிச்சை-தியானம், மனவொடுக்கம் போன்ற பயிற்சிகளை வழங்குதல் பற்றி குறிப்பிடப்படுகின்றது. பத்தாவது – இறுதி இயலில் மதுப்பாவனையை ஒழிப்பதற்கான யோசனைகள், அறிவூட்டல் செயற்பாடுகள், இளைய தலைமுறையினரின் பாதுகாப்பு என்பன போன்ற சமூக அக்கறையுடன் வெளியிடும் கருத்துக்கள் என்பன இடம்பெறுகின்றன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 12841). 

ஏனைய பதிவுகள்

Jungle zu dieser Seite navigieren Fruit

Content Fruit Zen, Das Automatenspiel Für Entspannte Stunden Maklercourtage Funktionen Im Fruit Farm Novoline Slot Yeti Knüller Gebührenfrei Spielen Empfohlene Spiele Falls du via zu