எம்.ஐ.எம்.கலீல். கண்டி: குறிஞ்சி வெளியீடு, 280 ஏ, டீ.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (கண்டி: நேத்ரா ஓப்செட் பிரின்டர்ஸ், 280 ஏ, டீ.எஸ்.சேனநாயக்க வீதி).
ix, 88 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: ரூபா 450., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-51777-4-0.
உலகின் கண்டங்களிலுள்ள பாலைவனமாகுதலின் பண்புகளையும் பாதிப்புகளையும் அதனால் ஏற்படுகின்ற நிலவுருவங்களையும் பாலைவனமாகுதலுக்குரிய மானிடக் காரணிகளையும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும் தெளிவு படுத்துவதோடு பாலைவனமாகுதலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது. பாலைவனமாதல் அறிமுகம், பாலைவனங்கள், உலகிலுள்ள பாலைவனங்கள், கண்டங்களுக்கேற்ப பாலைவனங்களின் வகைகள், பாலைவன நில உருவங்கள், பாலைவனமாதலுக்குரிய காரணங்கள், பாலைவனமாதலினால் ஏற்படும் விளைவுகள், பாலைவனமாதலைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61283).