11345 சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சி.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: மா.சின்னத்தம்பி, இயக்குநர், அபிவிருத்தி நிறுவன வெளியீடு, கொக்குவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1988. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலட்சுமி பிரஸ்).

(6), 35 பக்கம், விலை: ரூபா 15., அளவு: 17×12 சமீ.

அமரர் பேராசிரியர் ப.சந்திரசேகரத்தின் மறைவின் ஓராண்டு நினைவைக் குறிக்கும் ஓர் அஞ்சலி மலராக இந்நூல் வெளிவந்துள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் நாட்டில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி தமிழ் மக்களின் மத்தியில் எவ்வகையில் செறிந்தது எனக் காட்ட முற்படும்; நூல். குடியேற்றவாதம், தேசியவாதம் என்ற காரணிகளின் தாக்கம் தமிழ் மக்களின் கல்வியில் ஏற்படுத்திய விளைவுகளை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் கல்வி விரிவாக்கத்திற்குரிய காரணிகளுள் தேசிய மொழிகள் கல்வி மொழியாக்கப்பெற்றமை முதன்மை நடவடிக்கையாக விளங்கிற்று என்கிறார் ஆசிரியர். குடியேற்றவாதப் பின்னணியும் கல்வி விரிவாக்கமும், கல்வி விரிவாக்கமும் தமிழ்மக்களும், 1972ஆம் ஆண்டின் கலைத்திட்ட மாற்றங்களும் தமிழ் மக்களும், பிரத்தியேகக் கல்வி நிலையங்களின் வளர்ச்சி, 1977ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட வளர்ச்சி, மீண்டும் விருத்தி ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்