முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல். மருதமுனை: ஆயிஷா வெளியீட்டகம், 520/1, மசூர் மௌலானா வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (மருதமுனை: அப்னா பிறின்டர்ஸ்).
x, 66 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54169-5-5.
1911ஆம் ஆண்டு முகலம் சுலைமாலெவ்வை போடி இப்றாலெவ்வை போடி அவர்களினால் வழங்கப்பட்ட அரை ஏக்கர் காணியில் 28.11.1912அன்று அரசினர் தமிழ் ஆண்கள் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை இது. பின்னர் 0101.1974இல் அல் மனார் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் கண்டது. பாடசாலையின் முதல் அதிபராக (1912-1914) பி.சின்னையாவும் தொடர்ந்து ஜே.எஸ்.வேலுப்பிள்ளை (1914-1920), கே.எஸ்.வைரமுத்து (1921-1935), வீ.சாமித்தம்பி (1935-1940), யூ சின்னத்தம்பி (1940-1941), கே.இளையதம்பி (1941), ரீ.சீனித்தம்பி (1941-1943), கே.எஸ்.வைரமுத்து (1943-1948) ஆகியோரைத் தொடர்ந்து 1949 முதல் முஸ்லீம் அதிபர்களான ஏ.எம்.ஷரிபுத்தீன் (1949-1950), ஐ.எம்.எஸ்.எம்.பழீல் (1950-1951), ஈ.உதுமாலெவ்வை (1951-1952), ஏ.எம்.ஷரிபுத்தீன் (1952-1957), யூ.எல்.இஸ்மாயில் (1957-1962), ஏ.அஹமது லெவ்வை (1962-1969), ஏ.எச்.முஹம்மது (1969-1976), ஏ.எச்.முஹம்மது மஜீட் (1976-1992), எம்.எச் காதர் இப்ராஹீம் (1992-1994),ஏ.எல்.மீரா முகைதீன் (1994-2002), எஸ்.எல்.அப்துல் ரஹீம் (2003-2009) ஆகியோர் அதிபர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். 2009 முதல் இன்றளவில் எஸ்.எம்.எம்.எஸ்.உமர் மௌலானா (2009- ) அதிபராகப் பணியாற்றுகின்றார். மருதமுனைக் கிராமத்தைச் சேர்ந்த நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகமாணி சிறப்புப்பட்டம் பெற்றவர். பட்டதாரி ஆசிரியராக மருதமுனை கமு/அல்மனார் மத்திய கல்லூரி, ஷம்ஸ் மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் சிறிதுகாலம் பணியாற்றியவர். இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு அட்டாளைச்சேனை, பொத்துவில், ஓட்டமாவடி பிரதேச செயலகங்களில் பணியாற்றிய பின்னர், கல்முனை பிரதேச செயலாளராகப் பணியாற்றுகின்றார்.