11370 வர்த்தகமும் கணக்கியலும்: ஆண்டு 11.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, ஜுன் 1987. (அம்பலங்கொடை: மஹிந்த அச்சகம்).

viii, 117 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17 சமீ.

வர்த்தகமும் கணக்கியலும் என்னும் நூல்வரிசையில் மூன்றாவது நூல் இது. 11ஆம் ஆண்டு மாணவர்களுக்காக எழுதப்பட்டது. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் பாடத்திட்டத்தின் கடைசிப் பகுதியை அடியொட்டி இந்நூல் எழுதப்பட்டது. இதன்படி 9ம், 10ஆம், 11ஆம் ஆண்டுகளுக்கான இம் மூன்று நூல்களின் வாயிலாக வர்த்தகமும் கணக்கியலும் பற்றிய பாடத்திட்டம் முற்றுப்பெறுகின்றது. இந்நூலின் முதற்பகுதி வர்த்தகம் பற்றியது. அதற்குரிய நான்கு அத்தியாயங்களான தனி வியாபார அமைப்பும் பங்குடைமை வியாபார அமைப்பும், சட்ட வரைவுள்ள கம்பெனிகள், அரக கூட்டத்தாபனங்கள்-நியாயாதிக்க சபைகள்- திணைக்களங்கள், கூட்டுறவு அமைப்பும் சங்கங்களும் ஆகியவற்றின் மூலம் பல்வேறு வியாபார அமைப்புகள் பற்றிய விளக்கம் தரப்பட்டுள்ளது. இறுதிப்பகுதி கணக்கியல் பற்றியதாகும். இதுவும் நான்கு அத்தியாயங்களைக் கொண்டது. செலவுகளை வகைப்படுத்தல்-வேறுபடுத்தல்-செம்மையாக்கல், வியாபார இலாபநட்டக் கணக்கும் ஐந்தொகையும், ஆக்கக் கணக்கு, கொள்ளல் கொடுத்தற் கணக்கும் வருமானச் செலவுக் கணக்கும் ஆகிய நான்கு அத்தியாயங்கள் மூலம் கணக்கியல் பாடத்திட்டத்தில் 9ஆம் 10ஆம் ஆண்டுகளில் உட்படுத்தப்படாத அலகுகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11192).

ஏனைய பதிவுகள்

15842 புனைகதையும் சமூகமும்: மு.சிவலிங்கத்தின் சிறுகதைகள் ஓர் ஆய்வு.

சு.தவச்செல்வன். டிக்கோயா: சு.தவச்செல்வன், மழை வெளியீடு, இன்வெரி தோட்டம், 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). 88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-44552-8-3. மலையக எழுத்தாளரும்