மு.கந்தையா. யாழ்ப்பாணம்: திருவாட்டி தங்கச்சியம்மா சின்னையா முதலாண்டு நினைவு வெளியீடு, இணுவில் கிழக்கு, இணுவில், 1வது பதிப்பு, 1985. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).
(4), 14 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
அபரக்கிரியைகளில் நம்பிக்கைவைத்து வாழும் ஒரு சமூகமான சைவர்களுக்கு இவ்வினா-விடைக் கொத்து ஒரு ஞானக் களஞ்சியமாகும். ‘போகுமாறெங்ஙனே வருமாறேதோ’ என்ற அருள்வாக்கு சைவ சமய நெறிகளைக் கடைப்பிடிப்போரின் உள்ளத்தில் எழும் ஒரு ஐயப்பாடாகும். இந்நூல் இந்த ஐயத்தைத் தெளிவுபெறவைக்கின்றது. வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றில் பிதிர்க்கடன் பற்றிய சிறப்பு பேசப்பட்டு வந்துள்ளது. அசுர குலத்தினராகிய இரணியன், விபூசணன் ஆகியோர்கூட நம்பிக்கைவைத்து பிதிர்க் கடனைச் செலுத்தியமை பற்றி கந்தபுராணமும் இராமாயணமும் சிறப்பித்துக் கூறுகின்றன. சீதை இராமாயணத்தில் அனுமானிடம் கூறியதாக ‘கங்கையாற்றங் கரையடியேற்குத் தன் செங்கையாற் கடன்செய் கென்று செப்புவாய்’ என்று ஒரு கவிவரியுண்டு. தென்புலத்தார் தெய்வம் விருந்து, ஒக்கல், தான் என்ற வகையில் ஒரு இல்லறத்தானுடைய பணியை எடுத்துக் கூறுகிறார் வள்ளுவர். நமது நன்றிக்கடனான பிதிர் கரும வேளைகளில் கருத்துணர்ந்து பயணுணர்ந்து ஆன்ம உய்வுணர்ந்து தெரிந்துகொள்ள இக்கேள்விக்கொத்தும் அதற்கான பண்டிதர் மு.கந்தையா அவர்களின் விடைகளும் நமக்கு உதவுகின்றன.