ஞானப்பிரகாசர். சுன்னாகம்: வியாபார ஐக்கிய சங்கத்தார், 1வது பதிப்பு, 1927. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்கஅச்சகம்).
xvi, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×13.5 சமீ.
சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் நூல். தமிழ்ச் சொற்றொகுதிகள், இடம் பற்றிய பெயரீடு, முதற்சொல்லடிகள், சொல்லர்த்தங்கள் விரிந்த விசித்திரம், பிரதிப் பெயர்கள், பெயர் விகுதிகள்-வேற்றுமை உருபுகள், காலங் காட்டும் இடைநிலைகள், செயவெனெச்சம்- வியங்கோள்-எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள், ஆகிய பத்து அதிகாரங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் வரலாறு விளக்கப்பட்ட சொற்கள் அனுபந்தமாகத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104).