விசாகப் பெருமாளையர். யாழ்ப்பாணம்: நா.பொன்னையா, ஈழகேசரி அதிபர், திருமகள் நிலையம், மயிலிட்டி தெற்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1939. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(4), 78 பக்கம், விலை: சதம் 35., அளவு: 18×12 சமீ.
அணியிலக்கணம் என்னும் இந்நூல், முதன்முதல் நன்னூற் காண்டிகையுரை இயற்றி வெளியிட்டரும் வித்துவானுமாகிய திருத்தணிகை-விசாகப் பெருமாளையர் அவர்கள் இயற்றிய ‘பாலபோத இலக்கணம்’ என்ற நூலின் அணியிலக்கணப் பகுதியாகும். விசாகப் பெருமாளையர் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னைக்கு அணித்தாயுள்ள திருத்தணிகையில் பிறந்தவர். இலக்கணம் கற்கும் மாணவர்களின் இடர்ப்பாடொழிக்கும் வகையில் பஞ்ச இலக்கணங்களையும் தெளிவுபட விளக்கி ‘இலக்கணச் சுருக்க வினாவிடை’ என்னும் நூலை வெளியிட்டிருந்தார். மாணவர் நலன் கருதி இந்நூலின் அணியிலக்கணப் பகுதியும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10563).