செ.திருநாவுக்கரசு, சு.லோகேஸ்வரன், யூசுப் எம்.அஸ்றப், எஸ்.கௌதமன், குணேஸ்வரி இரகுநாதன் (தொகுப்பாசிரியர் குழு). யாழ்ப்பாணம்: விஜயலட்சுமி திருநாவுக்கரசு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (யாழ்ப்பாணம்: வந்தனம் பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்புச் சந்தி).
x, 623 பக்கம், விலை: ரூபா 1200., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-52960-6-9.
2017ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ள புதிய பாடத்திட்டத்திற்கு அமைவான தரம் 12இன் தமிழ் பாடநூல் பகுதி 1 இற்குரிய முழுப் பாடத்திட்டமும் அடங்கிய நூல். சங்ககாலப் பாடல்கள் (குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு), திருக்குறள் (பொருட்பால் 5-11 அதிகாரங்கள்), சிலப்பதிகாரம் (ஊர்காண் காதை 15-61 அடிகள்), திருவாசகம் (கோவில் திருப்பதிகம்), அமலனாதிபிரான் (திருப்பாணாழ்வார்), தேம்பாவணி, கம்பராமாயணம் (குகப்படலம் கங்கைகாண் படலம்), பாரதியார் பாடல்கள் (குயிற்பாட்டு, கண்ணம்மா என் காதலி, பெண்விடுதலை, பாஞ்சாலி சபதம்), ஈழநாட்டுக் குறம் (ப.கு.சரவணபவன்), பாரதியார் (பண்டிதர் மு.நல்லதம்பி), கட்டுரைகள் (தமிழ்த்தொண்டு-சுவாமி விபுலானந்தர், தமிழர் நாகரிகத்தில் கிராம வாழ்க்கை-புதுமைப் பித்தன், மானுடம் தழுவிய கவிஞர்கள்-பேராசிரியர் க.கைலாசபதி), சிறுகதைகள் (தியாகம்-கு.அழகிரிசாமி, தேர்-எஸ்.பொன்னுத்துரை), நாவல் (ஒரு வெண்மணற் கிராமம் காத்துக்கொண்டிருக்கிறது- வ.அ.இராசரத்தினம்), நாடகம்- இரு துயரங்கள்-இ.முருகையன்), மாதிரி வினாப்பத்திரம் ஆகிய 15 பிரிவுகளாக வகுக்கப்பட்டு பாடங்கள்
தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61375).