மா.இராசமாணிக்கம். யாழ்ப்பாணம்: ம.வஸ்தியாம்பிள்ளைஅன் சன்ஸ், சுண்டிக்குளி, 11வது மீள்பதிப்பு, மார்ச் 1948, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1932. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்).
viii, 140 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 18×12.5 சமீ.
முதல் மூன்று பாரங்களுக்கும் (Forms) உரிய தமிழ் இலக்கண அறிவை தனித்தனியே எழுத்து, சொல், சொற்றொடர், புணர்ச்சி, பரீட்சைக்குரிய வினாக்கள் எனப் பிரித்து ஆசிரியர் இந்நூலைத் தயாரித்துள்ளமை சிறப்பம்சமாகும். உதாரணங்கள் பெரும்பாலும் மாணவர்களுக்கு மிகப் பழக்கமானவையாகவே அமைக்கப்பட்டுள்ளன. இலக்கண விதிகள், பெயர் வகைகள், வேற்றுமை உருபுகள், வினை முற்றுக்கள், எச்சங்கள், புணர்ச்சி, இன்ன பிறவும் ஆங்காங்கு வேண்டிய இடங்களில் தெளிவான தடித்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளன. பொருத்தமான இடங்களில் ஆங்கிலப் பெயர்களும் தரப்பட்டுள்ளன. புணரியலில் பொதுவாக இடர்ப்படும் மாணவர்களுக்காக, புணரியலைத் தெளிவுறக் கணித முறையில் (Algebraical Method) விளக்கியுள்ளதோடு, வாக்கிய வகை அவற்றின் அமைப்பு, முடிபு, தன்கூற்று, பிறர்கூற்று இன்ன பிறவும் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் சென்னையிலும் இலங்கையிலும் பாடநூலாகப் பயன்படுத்துவதற்காக பாடநூல் கமிட்டியால் தேர்வுசெய்யப்பட்டது. நூலாசிரியர் சென்னை, முத்தியாலுப்பேட்டை உயர்கலாசாலைத் தமிழாசிரியராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 127).