கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (தெகிவளை: திஸர அச்சகம்).
ix, 152 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ.
கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப விஞ்ஞானத்தின் தத்துவங்களை மாணவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ளும் வகையில் இரண்டு பகுதிகளில் எழுதப்பட்டுள்ள நூலின் இரண்டாவது பகுதியாகும். போதிய விளக்கப்படங்களுடன் மாணவர்களின் ஆர்வத்தை விஞ்ஞானத்துறையில் ஈர்த்தெடுக்கும் வகையில் இந்நூல் விசை-வேலை-சக்தி, அன்றாடம் தேவைப்படுகின்ற சில இரசாயனச் சேர்வைகள், மண், மிதத்தல், அணுக்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளன, மின்னோட்டங்கள் கடத்தப்படல், தாவரத்தின் தண்டும் வேரும், தாவரங்களினுள் பொருட்கள் கடத்தப்படல், சமிபாடு, அமுக்கம் ஆகிய அலகுகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11194).