நா.சுந்தரலிங்கம், சி.பரமநாதன் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத்திணைக்களம், புதிய செயலகம், மாளிகாவத்தை, 1வது பதிப்பு, நவம்பர்; 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
266 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
கல்வி அமைச்சின் 1979ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்தின்படி இந்நூல் தயாரிக்கப்பட்டது. திண்ம உருவங்களின் மேற்பரப்பின் பரப்பளவுகளும் கனவளவுகளும், புள்ளி விபரங்கள், தொடைகள், நிகழ்தகவு, முக்கோணிகளின் இயல்பொப்பு, திரிகோணகணித விகிதங்கள் ஆகிய பிரதான பாடங்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. மடக்கை அட்டவணை, சைன் அட்டவணை, கோசைன் அட்டவணை, தான்சன் அட்டவணை, கலைச்சொற்கள், விடைகள், சுட்டி என்பன பின்னிணைப்பில் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் குழுவில் டி.எஸ்.ஜே.கன்னங்கர, ஏ.ஜே.குணவர்த்தன, எஸ்.டி.டபிள்யூ குலத்திலக்க, எம்.ஏ.கூரே, என்.ரி.பெர்னாந்து ஆகியோரும் தமிழாக்கக் குழுவில் நா.சுந்தரலிங்கம், ஐ.தம்பிமுத்து, சி.பரமநாதன், ந.வாகீசமூர்த்தி ஆகியோரும் பணியாற்றியிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11202).