ஏ. மில்னிஸ் மாஷல் (மூலம்), எச்.ஜீ.நியூத் (பதிப்பாசிரியர்). கொழும்பு: அரசகரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1966. (கொழும்பு: அரசாங்க அச்சகம்).
xii, 272 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.
தவளையை மாதிரியாகக் கொண்டு, ஆரம்ப உடலமைப்பியல், இழையவியல், முளையவியல் ஆகியனவற்றிற்குச் செயல்முறை வழிகாட்டியாக மாணவர்கட்குப் பயன்படுவதே இந்நூலின் நோக்கமாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆங்கில மூல நூல் 1882இல் முதற்பதிப்பைக் கண்டுள்ளது. அந்நூலின் 12ஆம் பதிப்பின் 1956ஆம் ஆண்டு மீள்பதிப்பின் தமிழாக்கமே இந்நூலாகும். தவளையின் பொதுவான உடலமைப்பியல், தவளையின் வன்கூடு, தவளையின் தசைத் தொகுதி, தவளையின் நரம்புத் தொகுதி, கண்ணும் காதும், இனம் பெருக்கும் அங்கங்களும் கழியறையும், தவளையின் விருத்தி, ஆரம்ப இழையவியல், கலப்பிரிவு – மூலவுயிர்க் கலங்களின் விருத்தி ஆகிய பத்து அதிகாரங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பாடத்தினை விளக்கும் வகையில் பல விளக்கப் படங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10104).