11437 சுகாதார சேவை வழங்குநருக்கும் பெறுநருக்குமான குடும்பத் திட்டமிடல் கைநூல்.

வி.கோகுலன், எஸ்.சசிகாந்த், கே.சுஜந்தன், கியூ.வினுஷியா, பீ.துஷ்யந்தி. யாழ்ப்பாணம்: சுகாதார கல்விசார் தயாரிப்பு அலகு, சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை, மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை வீதி).

iv, 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

குடும்பம் சமூகத்தின் கட்டமைப்பு அலகாகும். குடும்பங்கள் அடிப்படை சமூக அலகு என்ற வகையில் சமூக மாற்றங்கள் அங்கேயே ஆரம்பிக்கப்படவேண்டும். அதன் காரணமாகவே குடும்பத் திட்டமிடல் சேவைகள் குடும்ப சுகாதார சேவைகளினுள் உள்வாங்கப்பட்டுள்ளன. இம்மக்களிடையே குடும்பத் திட்டமிடல் முறைகள் பற்றிய சரியான விளக்கமின்மையும் சந்தேகங்களும் இருக்கின்றன. அதன் விளைவாக வேண்டாத கர்ப்பங்களும், இளவயதுக் கர்ப்பங்களும் இலங்கையின் சுகாதார சேவையில் மாத்திரமல்லாது, எமது சமூகப் பிரச்சினையாகவும் மாறிவருகின்றன. இந்நிலையில் மருத்துவ ரீதியான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் பற்றிய தகவல்களை எளிய வடிவில் அவர்களுக்கு இந்நூல் விளக்குகின்றது. குடும்பத் திட்டமிடல், வாய்வழி மாத்திரை, அவசர குடும்பக் கட்டுப்பாட்டு வில்லை, ஆணுறை, கருப்பை உட்சுருள், ஊசிமூலம் புகுத்தப்படும் ஓமோன், ஓமோன் உட்செருகிகள், இயற்கையான குடும்பத்திட்ட முறை, கர்ப்பத்தடை சத்திரசிகிச்சை (நிரந்தர முறை), கருச்சிதைவும் குடும்பத்திட்ட முறைகளும் ஆகிய 10 இயல்களில் இந்நூல் விளக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

11283 பிரவாதம் தொகுதி 3: ஜனவரி-ஜுன் 2003.

எம்.ஏ.நுஃமான் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, டிசம்பர்; 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 116 பக்கம், விலை: ரூபா

10617 புலியூர்ப் புராணம்.

சிவானந்த ஐயர் (மூலம்).ஐ.பொன்னையாபிள்ளை (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: சிவஸ்ரீ சிவகடாட்ச கணேசலிங்கக் குருக்கள், பாலர் ஞானோதய சபை, காசி விநாயகர் தேவஸ்தானம், வீணாக்கடவை, 2வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, 1936. (மானிப்பாய்: சௌந்தரம் அச்சகம்).

Darmowe Kasyno

Content Strategie Płatności: Które to Najkorzystniejsze Opcje Pozyskuje Ci Kasyno Przez internet? Bądź Ludzie z polski Mogą Mieć na afiszu W całej Kasynie Sieciowy? Porównaj