11443 பெருமூளை வாதம்: விசேட தேவையுள்ள பிள்ளைகளின் பெற்றோர்களிற்கான கைநூல்.

கீதாஞ்சலி சத்தியதாஸ். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி கீதாஞ்சலி சத்தியதாஸ், குழந்தை வைத்திய நிபுணர், சிரேஷ்ட விரிவுரையாளர், மருத்துவ பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மார்ச் 2017. (யாழ்ப்பாணம்: அன்ரா டிஜிட்டல் பிரின்டர்ஸ், இல. 356, கஸ்தூரியார் வீதி).

v, 30 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 70., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38062-0-8.

குழந்தைகளின் விருத்தியடையும் மூளையில் ஏற்படும் தாக்கத்தினால் உடற் செயற்பாட்டில் ஏற்படும் ஒரு பின்னடைவினால் பெருமூளைவாதம் உருவாகின்றது. இது ஒரு குழந்தை பிறக்கும் முன்னர், அல்லது பிறக்கும்போது, அல்லது பிறந்த பின்னர் ஏற்படும் அசாதாரண சூழ்நிலைகளால் ஏற்படுகின்றது. இந்நூல் சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் இந்நோயினால் பீடிக்கப்பட்ட குழந்தைகளின் மூளைப் பாதிப்பினால் அவர்களது செயற்பாடுகளில் வெளிப்படும் மாற்றம் குறித்து பெற்றோருக்கும் ஏனையோருக்கும் தெளிவான விளக்கத்தை வழங்குகின்றது. பெற்றோர், முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பிள்ளைகளில் அக்கறை காண்பித்து பெருமூளை வாதம் எனப்படும் செரிபரல் பால்சி (Cerebral Palsy) என்ற நோயினால் பாதிக்கப்படும் பிள்ளைகளையும் அவர்களது சிறப்புத் தேவைகளை அறிந்து, ஏனைய பிள்ளைகளைப் போன்று வளர்ப்பதற்கும் இந்நூல் வழிகாட்டுகின்றது.

ஏனைய பதிவுகள்

Greatest Free Blackjack Video game Online

Articles Live Black-jack FAQ Advantages of Alive Blackjack Online game When you can obvious the wagering specifications playing on line black-jack, that delivers a black-jack

13358 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: பாராளுமன்ற செயலகம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, 1வது பதிப்பு, டிசம்பர் 1988. (கொழும்பு: அச்சுத் திணைக்களம்). x, 230 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு 24×17 சமீ. இவ்வரசியலமைப்புச்