11448 மருத்துவ நோக்கில் சித்தர்களும் தத்துவ சிந்தனைகளும்.

பொன். இராமநாதன். யாழ்ப்பாணம்: கலாநிதி பொன். இராமநாதன், கனகதாரா, தாவடிச் சந்தி, கொக்குவில், 1வது பதிப்பு, பெப்ரவரி 2009. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி ஓப்செற் பிறின்ரேர்ஸ், கோண்டாவில்).

xii, 246 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20×14 சமீ.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மாணவருக்கான துணைப்பாடநூல். கலாநிதிப் பட்டத்திற்கு ஆசிரியரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் சில பகுதிகளையும் உள்ளடக்கியது. கலாநிதி பொன். இராமநாதன், கைதடி சித்த மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராவார். இரு பகுதிகளைக் கொண்ட இந்நூலின் முதற் பகுதியில் சித்தர்கள் பற்றிதோர் அறிமுகம் இடம்பெறுகின்றது. சித்தர்கள், சித்தர்களின் பிரிவுகள், சித்தர்கள் காலம், பதினெண் சித்தர்கள், சித்தர்களின் சிறப்பியல்புகள் (அட்டாங்க யோகம், அட்டமா சித்து), ஈழத்துச் சித்தர்கள் ஆகிய உப பிரிவுகளைக் கொண்டதாக முதற் பகுதி அமைந்துள்ளது. இரண்டாம் பகுதி தத்துவ சிந்தனைகளை உள்ளடக்கியதாக அமைகின்றது. தத்துவ அறிவும் மருத்துவமும், சித்தாந்த அளவையும் சித்த மருத்துவமும், இந்திய தத்துவங்கள், தொன்னூற்றாறு தத்துவங்கள், ஐம்பூதக் கொள்கை, அண்டமும் பிண்டமும், தேகம் ஐம்பூதக் கூறு, ஆறு ஆதாரங்கள், பிரணாயாமமும் நரம்பு மண்டலமும், சித்தர்களின் கூர்ப்புக் கொள்கை, பரிணாம வளர்ச்சி, நால்வகைப் பிறப்பு, எழுவகைத் தோற்றம், சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள் உண்மையும் அணுக் கொள்கையும், முத்தொழிலில் சீவனும் சிவனும், சித்த மருத்துவனின் இலக்கணம், சித்தர்களின் பிண்ட உற்பத்திக் கொள்கை, சித்தர்களின் மணிமகுடமாகிய முப்பு, சித்தர்களின் இரசவாதக் கொள்கை, சித்தர்களின் காயகற்ப முறைகள், எண்வகைத் தேர்வுகளில் ஒன்றான நாடி பார்த்தல், சித்தர்கள் கூறும் நாடி பற்றிய சைவசித்தாந்தக் கருத்தக்கள் ஆகிய உப பிரிவுகளைக் கொண்டதாக இப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

12847 – புனைவுகள், நினைவுகள், நிஜங்கள்: ஒரு ஆய்வுநிலைத் தொகுப்பு.

செல்வி திருச்சந்திரன். கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58 தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xii, 134 பக்கம்,