மலர்க்குழு. வவுனியா: திரு லோகநாதன், வைத்தியசாலை சுற்றுவட்டவீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
124 பக்கம், தகடுகள், புகைப்படங்கள், அட்டவணைகள், விலை: அன்பளிப்பு, அளவு: 27×21.5 சமீ., ISBN: 978-955-50741-0-0.
யாழ்.மாவட்டம், மானிப்பாய், சுதுமலையைப் பிறப்பிடமாகவும் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி புவனேஸ்வரி லோகநாதன் அவர்களின் சிவபதப்பேறு குறித்த 31ம் நாள் நினைவுமலராக 10.07.2016 அன்று வெளியிடப்பட்ட இப்பிரசுரம், ‘வீட்டுத்தோட்டமும் சுற்றாடல் பாதுகாப்பும்’ என்ற அவரது நூலொன்றை இணைத்து வழங்குகின்றது. சுற்றாடல் மாசு அடையும் வழிகளும் சுற்றாடல் பாதுகாப்பும், மண்ணும் மண்பாதுகாப்பும், காடு அழிப்பின் தாக்கமும் காடு பாதுகாப்பும், உயிரினங்களின் பன்னிலைத் தன்மையும் அதன் பாதுகாப்பும், சேதனப் பயிர்ச் செய்கையின் முக்கியத்துவமும் சேதனப் பசளையும், சுற்றாடல் பாதுகாப்பில் வீட்டுத் தோட்டத்தின் முக்கியத்துவம், நிலையான அபிவிருத்தியும் வீட்டுத் தோட்டமும் ஆகிய ஏழு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அமரர் திருமதி புவனேஸ்வரி லோகநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.