ஆசிரியர் குழு. கொழும்பு: பெண்கள் கைத்தொழில் வர்த்தக சபை, 1வது பதிப்பு, 1987. (அச்சக விபரம் தரப்படவில்லை).
178 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
1985இல் தாபிக்கப்பட்ட பெண்களின் கைத்தொழில் வர்த்தக சபை, பெண் தொழிற்துறை உரிமையாளர்களுக்கும் பண்ணை தொழிற்றுறை உரிமையாளர்களுக்கும் நன்மை பயக்கும் ஆற்றல்மிக்க பொருளாதார, அபிவிருத்தி சேவையொன்றினை வழங்குகின்றது. மண்ணும் நீரும், சந்தைகளும் அவற்றின் வாய்ப்பு வளங்களும், தென்னை, பழங்கள், மரக்கறிப் பெருக்கம், வீட்டுத்தோட்டம் பற்றிய தகவல், கால்நடை, கோழிப்பண்ணை ஆகிய விடயங்கள் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. சர்வதேச அபிவிருத்திக்கான நோர்வே முகவர் தாபனத்தின் நிதி உதவியுடன் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10510).