வே.பேரம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு: மா.யே.பெரேரா, பதிவாணையாளர், 421 புல்லர்ஸ் வீதி, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
vii, 500 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×13.5 சமீ.
இந்நூலில் பயிர்ச் செய்கையும் அதனோடு தொடர்புடைய புவியியற் காரணிகளும், விலங்கு வேளாண்மையும் தேனீ வளர்த்தலும், பூந்தோட்டம் அமைத்தலும் இவற்றோடு தொடர்புடைய பிற விடயங்களும் சுருங்கிய முறையில் விளக்கப்பட்டுள்ளன. மண், மட்காப்பு, வளமாக்கிகளும் பசளைகளும், வடிகான் முறையும் நீர்ப்பாய்ச்சலும், பயிர்ச் செடிகளின் அமைப்பும் தொழிலும், பயிர்த் தாவரங்களின் கலவிமுறையினப் பெருக்கம், நெல், வேறு சில ஆண்டுப் பயிர்கள், பழமரங்கள், தேயிலை, இறப்பர், தென்னை, கொக்கோ, கோப்பி, தாவரங்களின் இனப்பெருக்கம், தாவர நோய்களும் தடைமுறைகளும், பயிரிடும் முறைமைகள், விளைபயிர்களிடைப் பொதுவான களைகள்: களைகளின் பரம்பல், பயிர்ச்செய்கைக் கருவிகளும் பொறிவகைகளும், உழுதலும் களைகட்டலும், விலங்கு வேளாண்மை, பறவை வேளாண்மை, வேளாண்மை விலங்குகளின் நோய்கள், தேனீ வளர்த்தல், அலங்காரத் தோட்டம் அமைத்தல் ஆகிய 24 அதிகாரங்களின் கீழ் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. விவசாயத்துறைக் கலைச்சொல் அட்டவணையொன்றும் பக்கம் 455 முதல் 500 வரை காணப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10820).