11455 ஆரோக்கிய உடலும் உணவும்.

லோ.விமலேந்திரன். யாழ்ப்பாணம்: புகழ் வெளியீட்டகம், வராகி அம்மன் கோவிலடி, கொக்குவில் மேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில்).

iv, 72 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 175., அளவு: 21×14.5 சமீ.

ஆரோக்கியக் குறிப்புகள், சமையற் குறிப்புகள் என்பன அடங்கியது. உணவுகளும் அவற்றிலுள்ள போசணைகளும், போசணைப் பொருட்களின் செயற்பாடுகள், உணவுகளும் கலோரியும், அன்றாட வேலைகளின்போது விரயமாகும் கலோரிகள், போசணைகளின் தேவை, உங்களுக்குத் தெரியுமா? உடற்திணிவுச் சுட்டி (BMI) கணித்தல், உயரத்திற்கேற்ற நிறையைப் பேணி நோய்களைத் தவிர்ப்போம், உங்கள் தொழில்களுக்கேற்ப உங்களுக்குத் தேவையான கலோரி அளவைத் தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் பிள்ளைகளுக்கு நிறைவான போசணை வழங்குகிறீர்களா? பிள்ளைகளின் உணவு விடயத்தில் கவனிக்க வேண்டியவை, காலையில் தயாரிக்கக்கூடிய உணவுவகை, விசேட மதிய உணவுவகைகள், கறி வகைகள், சூப் வகைகள், இரவு உணவு வகைகள், இனிப்புப் பண்டங்கள், அவண் சமையல் (Oven Cooking) ஆகிய 19 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் ஆர்:- 13479). 

ஏனைய பதிவுகள்

17243 பேண்தகு அபிவிருத்தி.

சி.அமலநாதன் (மூலம்), வே.குணரத்தினம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கலாநிதி சி.அமலநாதன் மணிவிழா வெளியீட்டுக்குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2023. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185A, திருமலை வீதி).  xiii, 239 பக்கம், 12 தகடுகள், விலை: