செ.பத்மநாதன், இ.அருமைநாதன் (தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு: சு.வெற்றிவேலாயுதன், பொதுச் செயலாளர், அரசாங்க எழுது வினைஞர் சங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 1972. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).
(6), 112 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
அலுவலக நடைமுறை, நிருவாகப் பிரமாணங்கள், அரசாங்க சேவை ஆணைக்குழு விதிகள் ஆகியவை தொடர்பாக பேராதனை விவசாயத் திணைக்கள ஊழியர்களுக்கு வழங்கிய விரிவுரைகளின் தொகுப்பு. பொது எழுதுவினைஞர் சேவையின் தரம் இரண்டிற்கான பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அலுவலக அமைப்பும் நடைமுறையும், நிருவாகம், ஒழுங்குமுறை நடவடிக்கை, இளைப்பாறல்கள் முதலியன, பொதுப்பிரமாணங்கள் ஆகிய ஐந்து பிரிவாக இந்நூல் தொகுக்கப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10139).