அருணாசலம் இரவீந்திரன். மட்டக்களப்பு: திருமதி சுசீலாதேவி இரவீந்திரன், 35/3, சின்ன உப்போடை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2013. (மட்டக்களப்பு: ஆதவன் அச்சகம், அரசடி).
vi, 138 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 26×18 சமீ.
இந்நூல் அரசதுறை உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கைநூலாக வெளிவந்துள்ளது. பொது முகாமைத்துவம், அலுவலக முகாமைத்துவம், அலுவலக முறைமையும் நடைமுறையும், பொது வினாப்பத்திரம், வினாக்களும் விடைகளும், விடய ஆய்வு ஆகிய ஆறு இயல்களாக வகுக்கப்பட்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் மட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட கணக்காளராகப் பணியாற்றியவர். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 13171).