11471 தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் யுகதர்மம் நாடகமும் பதிவுகளும்.

க.பாலேந்திரா. லண்டன்: தமிழ் அவைக்காற்று கலைக்கழகம், 107, Somervell Road, Harrow HA2 8TZ, இணை வெளியீடு, கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

135 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-555-0.

ஜேர்மனியரான பேர்டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht 1898-1956) என்ற நாடகாசிரியர் 1930களில் The Exception and the Rule என்ற நாடகத்தை யுகதர்மம் என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளனர். ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே உள்ள வர்க்க முரண்பாடுகளையும் முதலாளித்துவ சமுதாய அமைப்பில் எப்பொழுதும் ஏழைகளே பாதிக்கப்படுபவர்களாகவும் குற்றமிழைத்தவர்களாகவும் உள்ள அவல நிலைமையையும் யுகதர்மம் அழுத்தமாகப் பதிவுசெய்கின்றது. பேர்டோல்ட் பிரெக்டின் கற்றலுக்கான நாடகம் என்ற ‘அறிவுறுத்தும்  நாடகங்கள்’ வகையைச் சார்ந்த நாடகம் இது. 1979இல் கட்டுப்பெத்தையில் திரு பாலேந்திரா அவர்களால் முதலில் மேடையேற்றம் கண்டது. தொடர்ந்து 29 தடவைகள் மேடையேற்றம் கண்டு, 2017இல் லண்டனில் சிறுவர்களால் நடிக்கப்பெற்று 08.10.2017 அன்று மீண்டும் மேடையேற்றம் கண்டவேளையில் இந்நூல் வெளியிடப்பட்டது. நாடக எழுத்துருவுடன், க.பாலேந்திரா, சி.ஜெயசங்கர், மு.கண்ணன், இராஜதுரை லெஸ்லி ரவிச்சந்திரா, ப.ஸ்ரீஸ்கந்தன் ஆகியோரின் நினைவுரைகளும், நாடகம் தொடர்பான பல்வேறு விமர்சனங்களும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. விமர்சனக் குறிப்புகளை அ.யேசுராசா, தெளிவத்தை யோசப், ஏ.ரி. பொன்னுத்துரை, கே.எஸ்.சிவகுமாரன், ஐ.சண்மகலிங்கம், நெல்லை க.பேரன், கலைச்செல்வன், மு.புஷ்பராஜன், சி.சிவசேகரம், எஸ்.சிவநாயகம் ஆகியோர் எழுதியுள்ளனர்.

பின்னிணைப்பில் பாலேந்திராவின் நாடகங்களின் வெளியீட்டுத் தகவல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61617).

ஏனைய பதிவுகள்

Real cash Online casino Sites

Posts Mandarin Palace casino offers: Entry to Multiple Deposit & Payment Choices Finest United states Casinos on the internet Gambling on line Websites Alive Agent