மார்க்கண்டு அருள்சந்திரன். தெல்லிப்பளை: பத்தினியம்மா நிதியம், 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா டிஜிட்டல் பிரின்டர்ஸ், இல. 356, கஸ்தூரியார் வீதி).
58 பக்கம், புகைப்;படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-41403-0-1.
ஆசிரியர் 2010இல் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வட மாகாணத் தமிழ் இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்ட ‘நவீன மற்றும் பாரம்பரிய நாடகங்களில் கலைஞர்களாகப் பெண்கள்’ என்ற ஆய்வுக் கட்டுரையின் விரிவாக்கமாகும். நூலாசிரியர் கிளிநொச்சி மாவட்ட கலாசார உத்தியோகத்தராகப் பணியாற்றுபவர். தான் ஆர்வத்துடன் ஈடுபடும் அரங்கியல் துறையுடன் நில்லாது, காலஞ்சென்ற கலைஞர்களின் கலைப்பணிகளை வரலாற்றுநோக்கில் ஆவணப்படுத்தும் ‘பெட்டகம்’ என்ற பெயரில் ஆவணத்தொகுப்புப் பணியினையும் மேற்கொண்டு வருகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61657).