மாரி மகேந்திரன். தமிழ்நாடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை: விக்னேஷ் பிரின்ட்ஸ்).
118 பக்கம், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-908193-6-7.
இந்நூலில் திரைப்படத்துறை சார்ந்த 19 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. நம்முடைய அடையாளத்துடன் நம் ஈழத்துச் சினிமாவை உருவாக்கும்போது அதைத் தமிழகத்தில்கூடத் திரையிடமுடியும். நமக்கான சந்தைவாய்ப்பை உள்ளுர்தாண்டி வெளிநாடுகளிலும் பரந்துவாழும் தமிழர்களின் தேசத்தை நோக்கி திரையிட முடியும். ஈழத்துக்கு மட்டுமே அதற்கான அருகதை உண்டு. இதனை நாம் இன்னும் உணராதவர்களாக இருக்கின்றோம். இவ்வாறு வித்தியாசமான சிந்தனைகளைப் பதிவுசெய்கிறார் நூலாசிரியர். ஈழத்துத் தமிழ்ச் சினிமா சார்ந்த புரிதலும் உரையாடலும் பன்முகரீதியில் எழுச்சிபெறாத நிலையில் இந்நூல் இத்துறைசார்ந்த ஆக்க இலக்கிய மரபுக்கு புதுவளம் சேர்க்கும் நூலாகவும் அமைந்துள்ளது. மாரி மகேந்திரன் மலையகத்தின் பொகவந்தலாவை என்னும் ஊரில் 1974இல் பிறந்தவர். தமிழகத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி திரைப்பட நுட்பங்களைக் கற்ற இவரது ‘அறையின் தனிமை’ என்ற முதலாவது குறும்படம் தமிழக குறும்பட விழாவில் சிறந்த குறும்படமாகத் தேர்வு பெற்றிருந்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48543).