ஐதுரூஸ் ஏ.ஹஸன். கிண்ணியா: ஜீ பதிப்பகம், இல.21, அல்-அக்ஸா 1ம் தெரு, 1வது பதிப்பு, 2015. (கிண்ணியா 4: குளோபல் அச்சகம்).
28 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 25×17.5 சமீ., ISBN: 978-955-4841-02-4.
கிண்ணியாவின் பெருமையை இலங்கை முழுவதும் பரப்பிவரும் ஆற்றல்மிகு கவிஞர் கலாபூஷணம் ஹஸன்ஜியின் மற்றுமொரு சிறுவர் இலக்கியப் படைப்பாக ஆராரோ கண்ணா என்ற சிறுவர் பாடல் தொகுப்பு அமைகின்றது. ஓசை வடிவம், எதுகை மோனை, எளிமையான மொழிநடை, கருத்தியல் எனச் சிறுவர் இலக்கியத்துக்குரிய பண்புகளைத் தாங்கி நிற்கும் இந்நூல் சிறுவர்களின் சிந்தனையைப் பட்டைதீட்டும் பல கவிதைப் பாக்களைக் கொண்டுள்ளது. சிறுவர் கவிதைகள் அவர்களது உள்ளங்களில் ஆனந்த அலைகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் சிறிய சொற்களில் இனிய ஓசையுடன் பாடப்படும் பாடல்கள் அவர்களைக் குதூகலப்படுத்தி, சிந்தனைக்குப் பெருவிருந்தளிக்கும் எனவும் நம்பும் இக்கவிஞர் தன் படைப்புகள் மூலம் அதனை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.