பேபி சுதாகரன். வவுனியா: திருமதி பேபி சுதாகரன், இல. 200/17, நாகபூஷணி வாசா, சிவன் கோவில் வீதி, தோணிக்கல், 1வது பதிப்பு, 2013. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசாமி கோவில் வீதி).
72 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 25×17.5 சமீ.
இந்து தர்மாசிரியரும் சைவப் புலவருமான ஆசிரியை திருமதி பேபி சுதாகரன் இயற்றிய மழலைப்பாடல்கள் இவை. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் ஆரம்ப கற்கைநெறிப் பிரிவைச் சேர்ந்த இவ்வாசிரியர் மழலைச் சிறார்களின் மனதைக் கவரும் ஆக்கப் பாடல்களாக பல்வேறு தலைப்புகளில் இவற்றை உருவாக்கியுள்ளார். வகுப்பறைச் செயற்பாடுகளில் ஊக்கத்துடன் ஈடுபட இப்பாடல்கள் உறுதுணையாகின்றன. இறை வணக்கம், அம்மா, அப்பா, ஆசிரியர், ஆசை, கொக்கு, ஒற்றுமை, சித்திரைப் புத்தாண்டு, நீர், காற்று, மல்லிகை, புகைவண்டி என இன்னோரன்ன ஐம்பது பாடல்களை இத்தொகுதியில் காணமுடிகின்றது.