உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(8), 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21 சமீ., ISBN: 978-955-9233-39-8.
இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் கற்பித்தலை மேம்படுத்தும் பொருட்டு கதைகூறல், கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளை வினைத்திறனுடையதாக்கும் நோக்கத்துடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் மனதில் ஆழமாகப் பதியவேண்டிய நல்ல பல கருத்துக்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. ஒவ்வொரு கதையும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளன. இந்த நல்ல நல்ல கதைகளை உருவாக்கிய நூலாசிரியர் சிறுவர் உளவியலைப் புரிந்துகொண்டு அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்குடன் அவற்றை எழுதியுள்ளார். ஆலயம் தொழுவது சாலவும் நன்று, இறைவனின் அருள், கண்கண்ட தெய்வங்கள், எல்லா உயிர்கள் மேலும் அன்பு செலுத்துதல், மூத்தோர் வார்த்தை அமிர்தம், உணவளித்தல் உயர்வானது, நேர்மையின் நன்மை, உதவி புரிதல் நல்லது, சகோதர ஒற்றுமை, பள்ளிப்பாடங்களை தினமும் வீட்டிலும் படித்தல், முளையில் தெரியும் வளரும் பயிர்கள், போட்டியில் தோற்றுப்போனவனின் கதை, கண்ணனின் சுற்றுலா, நாதனின் நண்பர்கள், தீயார் நட்பு ஆகிய தலைப்புகளில் இதிலுள்ள 15 கதைகளும் எழுதப்பட்டுள்ளன.