ஹேமலதா கனகலிங்கம் (கதை), ஆர்.சுரேந்திரன்; (சித்திரங்கள்). இலங்கை: ரூம் டு ரீட் திட்டம், இல. 38, டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை, கொழும்பு 6, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட எம்.டி.குணசேன அன் கொம்பனி அச்சகம், 217 ஒல்கொட் மாவத்தை).
16 பக்கம், வண்ணப் படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×25 சமீ., ISBN: 978-955-7876-01-6.
குண்டுமீனும் குட்டிமீனும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வந்தது ஆபத்து. குட்டிமீன் அதிலிருந்து தப்பிவிட்டது. துர்அதிர்ஷ்டவசமாக குண்டுமீன் மாட்டிக்கொண்டது. குட்டிமீன் குண்டுமீனை எப்படி ஆபத்திலிருந்து காப்பாற்றுகின்றது என்பது தான் கதை. சுழழஅ வழ சுநயன அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் சிறுவர்களின் எழுத்தார்வத்தை வளர்ப்பதையும் வளரும்போதே ஆண் பெண் சமத்துவத்தை வளர்ப்பதையும் நோக்காகக் கொண்டு செயற்படுகின்றது. உள்ளுர் எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் பயன்படுத்தி இவர்கள் தயாரிக்கும் சிறுவர் நூல்கள் பாடசாலைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. இந்நூல்களை உள்ளுர் சமூகம், சுழழஅ வழ சுநயன மற்றும் மட்சுயா கம்பெனி லிமிட்டெட் ஆகியோரின் கூட்டாண்மையால் வெளியிடப்படுகின்றன.