11514 மரமனிதன்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).

48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7654-07-2.

குறைந்த சொற்கள்,  நிறைந்த காட்சி ஓவியங்கள், விரிந்த களன், சிறந்த செய்திகள் என்பதே ஆசிரியரின் சிறுவர் கதைகளின் சிறப்பு என்பதை இச்சிறுவர் கதையில் காட்டியிருக்கிறார். விஞ்ஞானச் செய்திகள், மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் சொல்லாடல்கள் என்று அவரது படைப்புக்கள் சிறுவர் இலக்கியத்துக்கு முன்மாதிரியாக அமைகின்றன. எட்டு வயதில் தான் தவறுதலாக விழுங்கிய புளியம் விதை வயிற்றில் முளைத்து மரமாகித் தான் மரமனிதனாகப் போகிறேன் என்ற கவலையில்  அவன் கண்ட கனவும், பின்னர் அவனது கவலைக்கு விஞ்ஞான ஆசிரியர் வழங்கிய விளக்கமும் இச்சிறுவர் கதையின் சுருக்கமாகும்.

ஏனைய பதிவுகள்