மூ.சிவலிங்கம். இணுவில்: அறிவாலயம், 1வது பதிப்பு, 2008. (இணுவில்: சண்சைன் கிரபிக்ஸ், காங்கேசன்துறை வீதி,
ix, 96 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
இணுவில் அறிவாலயத்தின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு வெளியாகியுள்ள நூல். இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட மூ.சிவலிங்கம் சீர் இணுவைத்திருவூர், வாழ்க வளமுடன், இல்லறம் சிறந்திட வாழ்க, இறையருட் செல்வர்கள் ஆகிய நூல்களை ஏற்கெனவே வழங்கியவர். இளஞ்சிறார்களின் மனதைப் பண்படுத்தும் வகையிலும் அவர்களின் சிந்தனையை வளர்க்கும் வகையிலும் ஒழுக்கப் பண்புகளைப் பின்பற்றும் வகையிலும் சமயப் பெரியார்களின் இளமை வரலாற்று நிகழ்ச்சிகளையும் பெரியோர்களின் வரலாற்று நிகழ்ச்சிகளையும் இளமையிலேயே சாதனை புரிந்த இளம் சாதனையாளர்களின் சாதனைகளையும் எளிய நடையில் இங்கு வழங்கியிருக்கிறார். பிறந்தவுடன் உற்சாகமூட்டிய ஒளவை, காலத்தை வென்ற மார்க்கண்டேயர், ஐந்து வயதுவரை வாய்பேசாத குமரகுருபரர் போன்ற வரலாற்றுப் பாத்திரங்களுடன், சமகாலத்தில் வாழந்த, வாழும் பாத்திரங்களையும் இங்கு அறிமுகம் செய்கிறார். உலகப் பிரசித்திபெற்ற தவில்மேதை தட்சிணாமூர்த்தி, ஒன்பது வயதில் சமயச் சொற்பொழிவாற்றிய வளரும் பயிர் ப.கௌரீசன், ஒன்பது வயதில் தவில் மேதையான ப.விபுர்ணன், சைவமும் தமிழும் வளர எம்மண்ணை நேசித்த இளம் சட்டத்தரணி துர்க்கா, 16 வயதினில் இசை அரங்கேறிய இந்து, பாரெல்லாம் பாய்ந்தோடும் தமிழ்(இசை)அருவி, குட்டிப் பயல் கோமல், ஒன்பது வயதில் திருக்குறளில் சாதனை படைத்த தீபா, சைவநெறித் தேர்வில் தங்கப் பதக்கங்கள் வென்ற யதுஷன், பேச்சுப் போட்டியில் இருமுறை தேசிய விருதுபெற்ற அ.உமாகரன் என்று சமகால சாதனையாளர்களையும் இவர் இந்நூலில் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 45419).