11532 தஞ்சைவாணன்கோவை மூலமும் உரையும்.

பொய்யாமொழிப் புலவர் (மூலம்), சொக்கப்ப நாவலர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவபரிபாலன சபை, 1வது பதிப்பு, மார்கழி 1936. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை).

ii,iv, xii, vii, 383 பக்கம், அளவு: 21×13.5 சமீ.

பொய்யாமொழிப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட இந்நூல் ஒரு அகப்பொருட்கோவை நூலாகும். இது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இந்நூல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தஞ்சாக்கூரில் வாழ்ந்த சந்திரவாணன் என்னும் சிற்றரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது. தஞ்சைவாணன், பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டியனின் படைத் தலைவனாகவும் அமைச்சராகவும் இருந்தவன். மாறை என்னும் கோவை நூல்கள் அகப்பொருள் இலக்கியமாகவே எழுதப்படும் மரபுக்கு ஏற்ப இது தலைவன் தலைவியின் அகவாழ்க்கை பற்றியதாக அமைந்துள்ளது. நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் இலக்கண நூலை அடியொற்றி இந்த இலக்கியம் படைக்கப்பட்டு இருக்கிறது. இது, களவியல், வரைவியல், கற்பியல் என்னும் மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று இயல்களிலும் உள்ள முப்பத்துமூன்று பிரிவுகளில் மொத்தம் 425 பாடல்கள் அடங்கியுள்ளன. இவற்றுள், களவியலில், 18 பிரிவுகளில் 280 பாடல்களும், வரைவியலில் 8 பிரிவுகளில் 86 பாடல்களும், கற்பியலில் 7 பிரிவுகளில் 59 பாடல்களும் அடங்குகின்றன. இந்நூல் முழுவதும் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10574).

தஞ்சைவாணன்கோவை.

பொய்யாமொழிப் புலவர் (மூலம்), சொக்கப்ப நாவலர் (உரையாசிரியர்), ந.சுப்பையபிள்ளை (குறிப்புரை), ம.இரகுநாதன் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தமிழ்த்துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, மீள்பதிப்பு, 2021. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், ஆடியபாதம் வீதி,திருநெல்வேலி).

xxiv, 464 பக்கம்இ அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-97806-0-6.

இந்நூல் கந்தையா கார்த்திகேசன் அறக்கொடை நிதியம் வழங்கிய நன்கொடையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்