11533 அறிவுரை மாலை.

ந.சி.கந்தையாபிள்ளை (தொகுப்பாசிரியர்). சென்னை 1: ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், 53-56 பவளக்காரத் தெரு, 4வது பதிப்பு, 1950, 3வது பதிப்பு 1943. (மதராஸ் 1: புரொகிரசிவ் பிரின்டர்ஸ்).

(7), 97 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 15.5×11 சமீ.

மாணவர்களுக்கான பிற பாடப் புத்தகங்களில் வராத புதிய பொருளுரைகளைத் தொகுத்து இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. இருமலையும் நிகரேயாம், நச்சினார்க்கினியர், சரித்திரம், முச்சங்கமும் இறையனார் அகப்பொருளும், எழுத்தின் வரலாறு, பழந்தமிழர் போர்முறை (நிரை கவர்தலும் நிரை மீட்டலும், நிரை மீட்டல், வீரக் கல், கல் நடுதலின் விபரம்), இசை மரபு, மொழியின் சரித்திரம், பண்டையோர் எழுத உபயோகித்த பொருள்கள், போசன்கதை, குண்டலகேசி வரலாற்றுச் சுருக்கம், நீலகேசி வரலாற்றுச் சுருக்கம், தமிழர் வாணிகம், சிந்துநதிப் பள்ளத்தாக்கில் தமிழர் நாகரிகம் ஆகிய 14 தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 741).

ஏனைய பதிவுகள்