அரசகேசரி (மூலம்), சி.கணேசையர் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சி.கணேசையர், புன்னாலைக்கட்டுவன், 1வது பதிப்பு, 1931. (சுன்னாகம்: தனலட்சுமி புத்தகசாலை).
92 பக்கம், விலை: சதம் 75., அளவு: 20.5×13 சமீ.
அயனெழுச்சிப் படலம் என்னும் இந்நூல் யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்து அரசாண்ட பாராசசேகரனின் மருமகனாகிய அரசகேசரியினால் தமிழில் இயற்றப்பட்ட இரகு வம்மிசத்திலுள்ள ஒரு படலமாகும். இது விதர்ப்ப நாட்டரசனாகிய போஜராஜனின் சகோதரியாகிய இந்துமதியின் பொருட்டு, அஜமகாராஜன் அயோத்தியிலிருந்து விதர்ப்ப நாட்டுக்குப் புறப்பட்டுச் செல்லுதலை உணர்த்துகின்றது. அஜனாவான் சூரியகுலத்தரசனாகிய திலீபராஜன் புதல்வனாகிய இரகுராஜனின் புதல்வனாவான். Cambridge Senior and Tamil Teachers Preliminary Exam 1932 இன் பாடத் தேவைகளுக்காகச் சிபார்சு செய்யப்பட்ட நூல் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84689).