பொன்.முத்துக்குமாரன், சு.இராசநாயகம் (மூலத் தொகுப்பாசிரியர்கள்), தி.ச.வரதராசன் (புதுக்கிய பதிப்பின் தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 3வது புதுக்கிய பதிப்பு, 1965, 1வது பதிப்பு, 1959, மீள்பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13 சமீ.
ஈழத்து அறிஞர்கள் பலருடைய கட்டுரைகளைக் கொண்டதான ஒரு நல்ல கட்டுரைத் தொகுதி, க. பொ. த. வகுப்பு மாணவர்களுக்கு, இலக்கிய பாட நூலாகத் தேவை என்ற காரணத்தால் இந்நூல் உருவாக்கப்பட்டது. வித்துவான் பொன். முத்துக்குமாரன், திரு சு இராசநாயகம் ஆகியோர் 1959இல் தொகுத்திருந்த ‘செந்தமிழ்த் தேன்’ என்ற நூலில் இடம்பெற்ற சிறந்த பத்துக் கட்டுரைகளுடன் மேலும் சில கட்டுரைகளைத் தேர்ந்து இணைத்து மொத்தம் 19 கட்டுரைகளுடன் அதே தலைப்பில் இந்நூல் வெளிவந்துள்ளது. தெய்வப்புலவர் திருவள்ளுவர் (சி.கணபதிப்பிள்ளை), உடலும் உளமும் (க.ச.அருள்நந்தி), குட்டிப் பிசாசும் உரொட்டியும் (லியோ டால்ஸ்டாய்-மூலம், தேவன் யாழ்ப்பாணம்-தமிழாக்கம்), ஞாயிற்றுப் பொட்டுக்கள் (ஆ.வி.மயில்வாகனம்), தமிழர் கண்ட சமுதாய வாழ்வு (பொன்.முத்துக்குமாரன்), சரித்திரப் பேரறிஞர் வி.கனகசபைப்பிள்ளை அவர்கள் (ச.அம்பிகைபாகன்), கடன்படல் (ஆறுமுகநாவலர்), தருமம் தலைகாக்கும் (உ.வே.சாமிநாதையர்), நமது தாய்நாடு (சி.ஆறுமுகம்), ஒத்த மரபு (கி.வா.ஜகந்நாதன்), கம்பர் கண்ட வாலி (சி.கணபதிப்பிள்ளை), ஏன் இந்தத் தயக்கம்? (மு.வரதராசனார்), இலக்கியங்களில் நகைச்சுவை (பொ.கிருஷ்ணபிள்ளை), ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் (ஆ.சதாசிவம்), அணுவினால் ஆக்கமும் அழிவும் (சி.ஜயரத்தினம் எலியேசர்), நான் விரும்பும் நாடு (பொன்.முத்துக்குமாரன்), தங்கத் தாத்தா (பொ.கிருஷ்ணபிள்ளை), கன்னன் (சுவாமி விபுலானந்தர்), மேடைநாடகத் தயாரிப்பு (க.செ.நடராசா) ஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 12950).