தமிழவேள் கந்தசாமி (உரையாசிரியர்). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).
56 பக்கம், விலை: ரூபா 3., அளவு: 21×14 சமீ.
இந்நூல் திருக்குறள்-ஒழிபியல் பற்றிய விளக்கக் குறிப்புகளையும், ஒழிபியற் பாக்களுக்குப் பதவுரை-விசேடவுரைகளையும் இலக்கணக் குறிப்புகளையும் சொல்-பொருள் நயங்களையும் வழங்குகின்றது. புதிய சமுதாய நோக்கில் ஒழிபியற் பாக்களுக்கு விளக்கம் தந்து இவ் ஒழிபியற் பகுதி மக்கள் சமுதாயத்துக்கு மிகப் பயனாவதை வலியுறுத்துகின்றது. முதலிரு இயல்களும் திருக்குறள் பற்றிய குறிப்புகள், ஒழிபியல் பற்றிய குறிப்புகள் என்பவற்றை தனித்தனியாக விளக்குகின்றன. தொடர்ந்து இயல் 3 முதல் இயல் 15 வரை, முறையே அதிகாரம் 96-குடிமை, அதிகாரம் 97-மானம், அதிகாரம் 98-பெருமை, அதிகாரம் 99-சான்றாண்மை, அதிகாரம் 100- பண்புடைமை, அதிகாரம் 101-நன்றியில் செல்வம், அதிகாரம் 102-நாணுடைமை, அதிகாரம் 103-குடிசெயல்வகை, அதிகாரம் 104-உழவு, அதிகாரம் 105-நல்குரவு, அதிகாரம் 106-இரவு, அதிகாரம் 107-இரவச்சம், அதிகாரம் 108-கயமை ஆகிய குறளதிகாரங்களை விளக்குகின்றன. இறுதியான 16ஆவது இயலில் மாதிரி வினாக்கள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 356).