11553 பாரதம்: உத்தியோக பருவம் கிருட்டிணன் றூது சருக்கம்: பொழிப்புரையுடன்.

வில்லிபுத்தூராழ்வார்; (மூலம்), ம.வே.திருஞானசம்பந்தன் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 1வது பதிப்பு, புரட்டாதி 1934. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச  யந்திரசாலை).

120 பக்கம், விலை: சதம் 75., அளவு: 21.5×14 சமீ.

மகாபாரதத்தில் கிருஷ்ணபகவான் பாண்டவருக்காக துரியோதனனிடம் தூது சென்ற வரலாற்றை விளக்கும் பாகம் கிருட்டிணன் தூதுச் சருக்கமாகும். இலங்கை உயர்கல்வி மாணவர்களுக்காக திருத்தியும், விளக்கியும், புதுக்கியும் எழுதப்பட்ட பொழிப்புரையுடன் இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 319).

ஏனைய பதிவுகள்

8788 மக்களின் மனிதன்.

சீநு ஆச்சுபே (Chinua Achebe) (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (சென்னை