அ.சே.சுந்தரராஜன் (பதிப்பாசிரியர்). சுன்னாகம்: அ.சே.சுந்தரராஜன், கல்லூரி அகம், இராமநாதன் கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 1961. (தமிழ்நாடு: சாரதாவிலாச பிரஸ், 8, கரிக்காரத் தெரு, கும்பகோணம்).
48+102 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 21×14 சமீ.
இலங்கை முன்னாள் அமைச்சர் சு.நடேசபிள்ளை அவர்களது முன்னுரையுடன் கூடிய நூல். இதில் முன்னுரை, கதைச்சுருக்கம், சிறப்பியல்புகள் என்பன முதற் பிரிவிலும், நளவெண்பா கலித்தெடர் காண்டம் 28 முதல், கலிநீங்கு காண்டம் (மூலமும் உரையும்), பொருளகராதி, உவமையகராதி என்பன இரண்டாம் பிரிவிலும் தரப்பட்டுள்ளன. முதற்பிரிவின் சிறப்பியல்புகளாக கதைப்பகுதிகளில் அமைந்த சிறப்பியல்புகள், கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள், வருணனைத்திறன், அடைமொழிகளை ஆளும் திறன், உவமை முதலிய அணிகள், வாழ்க்கை விமர்சனம் முதலியன ஆகிய ஆறு விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19312).