11558 கரை எழில் 2012.

மலர்க்குழு. கிளிநொச்சி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கரைச்சி,  1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: மதி பிரின்டர்ஸ், முத்திரைச் சந்தி, நல்லூர்).

xx, 193 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

2011ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளிவரும் பிரதேச மலரின் 2012ஆம் ஆண்டுக்கான இதழ் இதுவாகும். மலர்க் குழுவில் கோ.நாகேஸ்வரன், ச.பி.அமலராசா, கு.றஜீபன், வே.தபேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கிளிநொச்சியின் கல்வி வளர்ச்சி, உலகமயமாக்கல்- வன்னி அபிவிருத்தி ஒரு பார்வை, இலங்கைத் தமிழ் சினிமாவில் என் பார்வை, குரிசில் நல்கும் பெறல் அரும் பரிசில், சுயதொழில்களை வெற்றிகரமாகச் செய்தல், தமிழ் மரபு போற்றும் விழாக்கள், சமூகப் பண்பாட்டுப் பின்புலத்தில் அரங்கு: ஈழத் தமிழ் அரங்கு ஒரு நோக்கு, நாட்டுப்புறப் பாடல், கிரேக்க நாடகமும் கருத்தியலும் நாடகத்தில் கரணத் தோற்றம், முதலீடு ஒன்றினை மேற்கொள்ளும்போது கவனிக்கவேண்டிய விடயங்கள், நேரமுகாமைத்துவம், காணி ஆதனம் தொடர்பான சட்டங்களும் காணிப் பதிவு நடைமுறைகளும், யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமிழ்மொழியின் பிரயோக எல்லை இருப்புகளின் தொன்மை நிலையைக் காட்டும் சாசன மூலங்கள், கிளிநொச்சி எப்படி இருக்கிறது? அங்கே என்ன நடக்கின்றது? கொடியேற்ற விழாவின் சைவசித்தாந்தப் பொருண்மை, முகம் மறைத்தவள்-சில குறிப்புகள், ஆட்டம், ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் குறியீடு, சைவசித்தாந்த வளர்ச்சிக்கு ஈழத்தவர்களின் பங்களிப்பு, கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி கிழக்கு பிரதேசத்தில் புத்தொளி தந்த புழுதி ஆறு நீரிணை, தமிழ்ச் சூழலில் நவீனமயமாக்கமும் பெண்களும், மனிதநேயம், கரைச்சிப் பிரதேசமும் விஷ்ணு வழிபாடும், உலகத்தின் முழுமணியாய் விளங்கும் உலகப் பொதுமறை திருக்குறள், தமிழின் செவ்வியல் இலக்கியத் தோற்றம், சங்கத்தமிழர் பண்பாடு, தமிழ்ப் பாரம்பரியத்தில் அழகியற் கல்விச் சிந்தனைகள், தமிழ்ப் பழமொழிகளில் பெண்மை, கிளிநொச்சி மாவட்ட உளநல சேவைகளின் தொகுப்பு, வாழ்க்கையை நேசிப்போம், கவிதைகள், வன்னிப்பிரதேச வயற்பண்பாடு, கிளிநொச்சியின் நாடகத் தடங்களின் வழியே ஓர் உலா, கிளிநொச்சி ஒரு பெருநகரம்- வாய்ப்புகளும் வளங்களும் பற்றிய ஒரு முன்னுணர்வு, தமிழ்க் கலாசார மாற்றங்களும் அழிவுகளும் இழப்பியலும் இழிவிரக்கமும் ஆகிய 35 படைப்புக்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Curtains, Antes plus the Option

Articles Virginia’s Finest Court Reinstates Prohibit For the Electronic Experience Video game Additional Texas hold em Laws and regulations How to Enjoy Push Ha’penny Darts

14229 மங்களேஸ்வரக் குருமணி.

சி.குஞ்சிதபாதக் குருக்கள். கொழும்பு: சிவஸ்ரீ சி.குஞ்சிதபாதக் குருக்கள், பிரதம சிவாசாரியார், ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). v, 116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14