11566 மல்லிகை: 45ஆவது ஆண்டு மலர்.

டொமினிக் ஜீவா (ஆசிரியர்). கொழும்பு 13: மல்லிகை, 201/4, ஸ்ரீ கதிரேசன் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (கொழும்பு 13: லட்சுமி பிரிண்டர்ஸ்).

152 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 26.5×20.5 சமீ.

15.08.1966 அன்று ஈழத்துத் தமிழ்ச் சஞ்சிகை உலகில் கால்பதித்து 45 ஆண்டுகளைக் கடந்துவிட்ட மல்லிகை மாத இதழின் 2010க்கான சிறப்பிதழை மா.பாலசிங்கம் அவர்களின் உதவியுடன் ஆசிரியர் டொமினிக் ஜீவா உருவாக்கியுள்ளார். இதிலுள்ள சிறுகதைகளை கொற்றை பி.கிருஷ்ணானந்தன், க.சட்டநாதன், குருதட்சணன், கம்பவாரதி ஜெயராஜ், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், தெணியான், மு.பஷீர், பரன், டொமினிக் ஜீவா, தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், வேல் அமுதன், சந்திரகாந்தா முருகானந்தன், கெக்கிராவ சஹானா ஆகியோர் எழுதியுள்ளனர். கவிதைகளை வை.சாரங்கன், கெக்கிராவ சுலைஹா, சுமைதாங்கி, நெடுந்தீவு மகேஷ், ஈழக்கவி, சோ.பத்மநாதன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இவை தவிர, இலக்கியமும் மொழிபெயர்ப்பும் (க.நாகேஸ்வரன்), இலங்கை வானொலி ஆங்கில சேவையில் தமிழரின் பங்களிப்பு (கே.எஸ்.சிவகுமாரன்), துரோணாச்சாரியார் துரோகி இல்லையா? (சின்னராஜா விமலன்), அம்பேத்கரும் எம்.சி.சுப்பிரமணியமும் (ந.இரவீந்திரன்), போலித்தன அடையாளங்களை வெறுத்த போற்றத்தக்க கலைஞன் லடீஸ் (யு.ளு.ஆ.நவாஸ்), தமிழ்-சிங்கள மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் காலத்தின் தேவை (திக்கவல்லை கமால்), நாட்டார் இலக்கியங்கள் (இணுவில் மாறன்), மல்லிகையின் ஓராண்டுச் சிறுகதை 2008-2009 ஒரு மதிப்பீடு (எம்.எம்.மன்சூர்), பின்நவீனத்துவத்தால் மார்க்கியத்தை நிராகரிக்க முடியவில்லை (பிரகலாத ஆனந்த்), உலகத் தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடும் சர்வதேச விழா (முருகபூபதி), ஈழத்தின் சிறுகதைத் தரக்கணிப்புகள் பிழையானவையா? (மா.பாலசிங்கம்), பின் காலனியம் கோட்பாடும் இலக்கியமும் (மேமன்கவி), கிழக்கிலங்கை நாட்டாரிலக்கிய ஆய்வுகள்: செய்தவையும் செய்யவேண்டியவையும் (செ.யொகராஜா), உடப்புப் பிரதேசத்தில் முனைப்புப் பெற்றுவரும் கலை இலக்கியப் போக்கும் அதன் பின்புலங்களும் (உடப்பூர் வீரசொக்கன்) ஆகிய கட்டுரைகளும் இம்மலரை அழகுபடுத்துகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60097).

ஏனைய பதிவுகள்

11507 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் பால பாடக் கதைகள்.

ஆறுமுக நாவலர் (மூலம்), சு.செல்லத்துரை (தொகுப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய அறநெறிக் கல்விப் பிரிவு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு,

7 Eur ofwe 70 spins kosteloos!

Volume Probeer de website: De leukste online gokhuis games vindt jouw gedurende Winorama Stortingsmethoden Winorama Casino: wezenlijk te bij kennis Critique Het Winorama Casino Er