11569 அமுதம்: அமுதுவின் கவிதைகள் (முதலாம் பகுதி).

இளவாலை அமுது (இயற்பெயர்: அமுதசாகரன் அடைக்கலமுத்து). யாழ்ப்பாணம்: தம்பி தமிழ் அரங்கம், பண்டத்தரிப்பு, 1வது பதிப்பு, 1991. (தமிழ்நாடு: அஸிஸி அச்சகம், நாகர்கோவில்).

(14), 162 பக்கம், விலை: இந்திய ரூபா 20.00, அளவு: 21.5×14 சமீ.

அமுதுப் புலவரின் தேர்ந்த கவிதைகளின் முதலாவது தொகுப்பு. அமுது என அழைக்கப்படும் அமுதசாகரன் அடைக்கலமுத்து (செப்டம்பர் 15, 1918 – அக்டோபர் 23, 2010) ஈழத்துத் தமிழறிஞரும் புலவரும் ஆவார். இளவாலை அமுது என்னும் புனைபெயரில் பல கவிதை நூல்களை எழுதியிருக்கின்றார். செவாலியே விருது, பாவேந்தர் பட்டம் எனப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. கனடா தமிழர் தகவல் அமைப்பு சிறப்பு விருதும், தங்கப் பதக்கமும் வழங்கி கௌரவித்தது. 1984ம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வந்தார். யாழ்ப்பாணம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட அடைக்கலமுத்து (அமுது), தம்பிமுத்து-சேதுப்பிள்ளை ஆகியோரின் புதல்வர் ஆவார். யாழ்ப்பாணம் புனித சார்ல்சு வித்தியாலயம், யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றுப் பின்னர் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் படித்து பயிற்றப்பட்ட ஆசிரியரானார். இளவாலை என்ற ஊரில் திரேசம்மா என்பவரைத் திருமணம் முடித்தார். தகைமை பெற்ற ஆசிரியராக ஏறத்தாழ 45 ஆண்டுகள் நாட்டின் பல பாடசாலைகளிலும்; பணியாற்றியிருக்கின்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டமும் பெற்றுள்ளார். இவரது முதலாவது கவிதை 1938 இல் சத்தியவேத பாதுகாவலன் என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து இவரது ஆக்கங்கள் வீரகேசரி, தினகரன், சத்தியநேசன், காவலன், ஈழநாடு, உதயன், ஈழகேசரி, புதினம், அஞ்சல், தொடுவானம், ஈழமுரசு போன்ற பல்வேறு இதழ்களில் இலங்கையின் பெரும்பாலான இதழ்களில் வெளியாகியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14097).

ஏனைய பதிவுகள்

Play 19k+ Free Casino Games

Content The Allure Of Free Slot Games – 100 free spins no deposit csi real money Press Your Luck Slots More Popular Free Igt Slots