11578 இசைப் பாமாலை.

அகளங்கன் (இயற்பெயர்: நா.தர்மராஜா). வவுனியா: நா.தர்மராசா, பம்பைமடு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998.(வவுனியா: சுதன் அச்சகம்).

40 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21×14 சமீ.

கவிஞர் தமிழ்மணி அகளங்கனின் நாற்பது இசைப்பாடல்களைக் கொண்ட நூல்.  இவ்விசைப் பாமாலைப் பாடல்கள் யாவும் பல்கலைக்கழகம் வரை பயிலும் மாணவர்கள் வசதியான இராக தாள அமைவைக் கூட்டுவித்துப் பாடி மகிழ உகந்ததாய் உள்ளது. இந்நூலில் பல்வகைச் சந்தங்களிலும் எல்லையில்லாச் சிந்தையில் எழுந்த இசைப்பாடல்கள் வந்தனைக்கும் உகந்ததாய் அமைந்திருப்பது ஓர் தனிச்சிறப்பாகும். நாயகனே விநாயகனே, பிள்ளையார் எங்கள் பிள்ளையார், காக்கவேண்டும் நீயே, வினைகள் அகல வரம்தர வேண்டும் போன்ற பாடல்கள் வந்தனைக்குரியவையாகும். அலைகடல் மணற்பரப்பு, தாயே தமிழே, உறவுக்குக் கரம் கொடுப்போம், சலசலக்கும் ஓசையிலே போன்றவை பொது மேடைப்பாடல்களாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21085).

ஏனைய பதிவுகள்